Connect with us

job news

ரூ.60,000 முதல் ரூ.1,80,000 சம்பளம் ..V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு…உடனே அப்ளை பண்ணுங்க.!!

Published

on

வி.ஓ.சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை அடிக்கடி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது Deputy Chief Medical Officer துணை தலைமை மருத்துவ அதிகாரி பணிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகவும் இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்களின் எண்ணிக்கை

இந்த பணிக்கு இத்தனை காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிட்ட எண்களை அறிவிக்காமல் மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இனத்திற்கு சென்று கடைசி தேதி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சம்பள விவரம் 

இந்த பணியில் சேர ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து முடித்தவுடன் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக ரூ.60,000 முதல் ரூ.1,80,000 கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு 

இந்த பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் நீங்கள்  42 வயதான நபராக இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது இருந்தால் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி 

இந்த பணியில் சேர அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், முதுகலை டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

இந்தDeputy Chief Medical Officer துணை தலைமை மருத்துவ அதிகாரி பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://vocport.gov.in/ அல்லது இந்த pdf லிங்கை கிளிக் செய்து அதில் விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொண்டு பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முதலில் படித்துவிட்டு அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்கள் வைத்து விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து கீழே வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்பவர்களுக்கு கடைசி தேதி ஜூலை 31 என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகவரி -V.O. CHIDAMBARANAR PORT TRUST, HARBOUR ESTATE TUTICORIN – 628004

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *