job news
மாதம் ரூ.42,000 வரை சம்பளம்..! தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்..உடனே விண்ணப்பிங்க..!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute) என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் தேசிய ஆய்வகமாகும். இது தோல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள உலகின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களுடன் தொடர்புடையது.
தற்பொழுது இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தற்காலிக அடிப்படையில்,
அறிவியல் நிர்வாக உதவியாளர் – 21
திட்ட உதவியாளர் – 3
ப்ராஜெக்ட் அசோசியேட்-1 – 11
மூத்த ப்ராஜெக்ட் அசோசியேட் – 1
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவ் – 1
பணிகளை நிரப்ப உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தமாக 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 28 முதல் 50 வயதாக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
- அறிவியல் நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- திட்ட உதவியாளர், ப்ராஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் பி.இ/ பி.டெக்/பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ அல்லது கணினி அறிவியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- மூத்த ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து M.V.Sc முடித்திருக்க வேண்டும்.
- ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவ் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் இயற்பியல்/பகுப்பாய்வு வேதியியல் மற்றும் நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
- மேலே குறிப்பிட்டுள்ள தகுதி, வயது போன்றவற்றைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள், கீழே திட்டமிடப்பட்டுள்ள நாட்களில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
- நேர்காணலுக்கு வருவதற்கு முன் www.clri.org இணையதளத்தில் உள்ள Application விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக வீரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களின் நகல்களுடன், ஆதார் போன்ற புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் இடம்:
CSIR-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்,
சர்தார் படேல் சாலை,
அடையார், சென்னை 600020
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கான நேர்காணல் ஜூலை 13ம் தேதி வரை மட்டுமே நடைபெறும்.