job news
மாதம் 50,000 வரை சம்பளம்..அரசு கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..உடனே அப்ளை பண்ணுங்க.!!
Lalgudi Cooperative Office அரசு கூட்டுறவு நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், அரசு கூட்டுறவு சங்கம் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருந்தாளுனர் (Pharmacist ) பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளதாகவும் அதனை நிரப்ப வேண்டும் என்பதற்காக இந்த பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
காலியிடங்கள்
இந்தப் Pharmacist பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலி காலியிடங்கள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.
வயது வரம்பு
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் வயது வரம்பு கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் இந்த பணியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
சம்பளம்
இந்த Pharmacist பணிக்கு வேலையில் சேர நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூபாய் 15, 700 லிருந்து 50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
இந்தப் பணியில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் D.Pharm, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் நீங்கள் சேர விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கபட்ட விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு Written Exam/Interview கொடுக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணிக்கு சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொண்டு. அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியான ஆவணங்களை கொண்டு நிரப்பி அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நீங்கள் உடனடியாக நேரடியாகவே சங்கத்திற்கே நேரில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்துகொள்ள செல்லும் போது நீங்கள் D.Pharm கல்வி சான்றிதழை கொண்டு செல்லவேண்டும். மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.
முகவரி – எண்.48, திருச்சிராப்பள்ளி மெயின்ரோடு, சிறுதையூர், இலால்குடி, இலால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 601. தொலைபேசி எண்: 0431-2541248.