ரயில்வேயில் வேலை கிடைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இந்திய ரயில்வே துறையில் எந்த ஒரு பிரிவில் வேலை கிடைத்தாலும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஏனென்றால் மத்திய அரசு வேலை. அவ்வளவு சலுகைகளும் கிடைக்கும்.
சம்பளமும் படிப்படியாக உயரும். சமுதாயத்திலும் உயர்ந்த அந்தஸ்துடன் வாழலாம். உங்கள் குடும்பத்தையும் முன்னேற்றமான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். அப்படின்னா உங்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகளவில் ஆண்டுதோறும் அள்ளித்தரும் ரயில்வே துறையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் தானே.
இப்போதும் தெற்கு ரயில்வே துறை காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவங்க உடனே இப்பவே ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க. இதைப் பத்தி கொஞ்சம் டீட்டெய்லா பார்ப்போமா…
பதவியின் பெயர்
செவிலியர் கண்காணிப்பாளர் (Nursing Superintendent)
காலிப்பணியிடங்கள்: 27
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்களுக்கு 5.5.2023ம் தேதியின் படி, அதிகபட்சமாக 42 ஆக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.44,900 வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் 5.6.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்க.
மேலும் தகவல்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…