job news
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… 39,481 காவலர் பணியிடங்கள்… நாளை கடைசி நாள் உடனே முந்துங்க…!
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை, செயலக பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பாதுகாப்பு காவல் பிரிவில் உள்ள காவலர் பதவிக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் 39,481 காவல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,176 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணிகள்: எல்லை பாதுகாப்பு படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சசாஸ்திர சீமா பால் (SSB), செயலக பாதுகாப்பு படை (SSF), ரைபிள்மேன் அசாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவில் சிப்பாய் (NCB)
காலி பணியிடங்கள்: 39,481
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 23 வரை
சம்பளம்: நிலை – 1 படி, ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், இதர பிரிவு காவலர் பதவிக்கு நிலை-3 படி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
தேர்வு செய்யும் முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in/
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
இந்த காலி பணியிடங்களுக்கான கணினி தேர்வு 2025 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.