அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தேர்வில் பங்கேற்க தகுதியான நபர்கள் தொடர்ந்து அதற்காக அவர்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
குரூப் வாரியாக நடத்தப்படும் இந்த வித தேர்வுகள் அறிவிக்கப்பட்டதுமே லட்சக்கணக்கான நபர்கள் இதில் பங்கேற்க விண்ணப்பித்து விடுவார்கள். தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள கோச்சிங் சென்டர்களுக்கு சென்று அங்கே அதிக நேரத்தை செலவிட்டும், அது சார்ந்த விஷயங்களில் அதிகமான கவனத்தினை செலுத்தி வருபவர்கள் ஏராளமே.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் நிலையான ஒரு பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகுதி நேர வேலைகளுக்குச் சென்றும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் தங்களுக்கு தேவையான புத்தங்கங்களை வாங்கிப் படித்தும், அதற்கென துவங்கப்பட்டிருக்கும் பயிற்சி மையங்களுக்கு சென்றும் அங்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் சென்று படித்தும் குரூப் தேர்வுகளில் பங்கேற்க நினைப்பவர்களும், அவர்களது முயற்சியில் வெற்றி பெற்றர்களை நமது கண் முன்னே பார்த்தும் வருகின்றோம்.
எத்தனை முறை தோல்வியடைந்தாலும், மீண்டும், மீண்டும் தங்களது முயற்சிகளை செய்து பின்னர் சாதித்தவர்களைப்பற்றியும் நம்மில் பலரும் அறிந்திருக்கலாம்.
இந்தாண்டு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள். இதன் முடிவுகள் வெளியாகியிருக்கிறது . குரூப் 4 பிரிவில் 559 பணியிடங்கள் அன்மையில் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15.8 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்ட 3 மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை
tnpscresults.tn.gov.in
tnpscexams.in
ஆகிய இணைய தள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…