இந்த காலத்தில் அரசு வேலை என்பது பலரின் கனவாக உள்ளது. நாம் மிக சிறப்பாக முயற்சி செய்தால் வெற்றி என்பதை விரைவாக அடையலாம். இத்தகைய வரிசையில் தற்போது தமிழக தேர்வாணையம் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழு விளக்கத்தை பார்ப்போம்.
முக்கியமான நாள்கள்:
இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான தேதி வரும் 01.06.2023 முதல் ஆரம்பமாகிறது. இதற்கான கடைசி நாள் 30.6.2023.
காலியிடங்கள்:
இதற்கான மொத்த காலியிடங்கள் 615 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 20% துறைசார்ந்த இடஒதுக்கீடாகவும், மீதமுள்ள 80% த்தில் 10% வாரிசுக்கான இட ஒதுக்கீடாகவும் 10% விளையாட்டு துறையினருக்கான இட ஒதுக்கீட்டகவும் நிர்ணயித்துள்ளனர்.
வயது வரம்பு:
இந்த தேர்விற்கு 20- 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உச்ச வயது வரம்பு:
பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடுயினர் 35 வயது வரையிலும், விதவைகள் 37 வயது வரையிலும் விண்ணபிக்கலாம்.
மேலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், ஒரு ஆண்டிற்குள் ஓய்வு பெறும் ராணுவ அதிகாரிகள் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதெனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். திறந்தவெளி பல்கலைகழகத்தில் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு நிலைகள்:
எழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி-1: தமிழ் மொழி தேர்வு தகுதி தேர்வாக கணக்கிடப்படுகிறது. இதற்கான மதிப்பெண் 100 ஆகும்.
பகுதி-2: பொது அறிவு மற்றும் உளவியல்(psychology) இதற்கு 70 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு வைக்கப்படுகிறது.
தேர்வு கட்டணம்:
இதற்கான கட்டணமாக ரூ. 500 வசூலிக்கப்படுகிறது. இடஒதுக்கீடு உள்ளவர்கள் ரூ. 1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் இணைய வழியில் சென்று இதற்கான அறிவிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.
https://www.tnusrb.tn.gov.in/sitaluk-tnusrb.php
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…