Connect with us

job news

யுபிஎஸ்சி முக்கிய அறிவிப்பு… பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை…உடனே விண்ணப்பீங்க…!!!

Published

on

upsc recruitment 2023

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், (UPSC) Junior Translation Officer உள்ளிட்ட பல பதவிகளுக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. UPSC என சுருக்கமாக அழைக்கப்படும் இது இந்திய அரசின் கீழ் உள்ள அனைத்து குரூப் ‘A’ அதிகாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்தியாவின் முதன்மையான மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனமாகும். இந்நிலையில்,UPSC தகுதியான விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற UPSCயின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் மற்றும் காலியிடங்கள்

  • (Air Worthiness Officer) விமான தகுதி அதிகாரி: 80 காலியிடங்கள்
  • (Air Safety Officer)விமான பாதுகாப்பு அதிகாரி: 44 காலியிடங்கள்
  • (Livestock Officer)கால்நடை அலுவலர்: 6 காலியிடங்கள்
  • (Junior Scientific Officer)இளநிலை அறிவியல் அதிகாரி : 5 காலியிடங்கள்
  • (Public Prosecutor:)அரசு வழக்கறிஞர்: 23 காலியிடங்கள்
  • (Junior Translation Officer)ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி: 86 காலியிடங்கள்
  • (Assistant Engineer) உதவி பொறியாளர்: 3 காலியிடங்கள்
  • ( Assistant Survey Officer) உதவி ஆய்வு அலுவலர்: 7 காலியிடங்கள்
  • (Principal Officer) முதன்மை அதிகாரி: 1 காலியிடங்கள்
  • (Senior Lecturer)மூத்த விரிவுரையாளர்: 3 காலியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு

மேற்கண்ட இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, கல்வித் தகுதி முதல் வயது வரம்பு வரை அனைத்தும்  பதவிக்கான தகவலையும் தனித்தனியாகப் பார்க்கவேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவும், சிலவற்றிற்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள்

இந்த பதவிகளுக்கான வேலைவாய்ப்பின் அறிவிப்பு இன்று, 24 ஜூன் வெளியானது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை, ORA சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 13 ஜூலை. எனவே அதற்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரிண்ட்அவுட்டை UPSC இல் உள்ள பிற ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டிய நேர்காணலுக்கான தேதி அவர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

முதலில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், UPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in  க்கு சென்று, அங்கு முகப்புப் பக்கத்தில், ‘ஆட்சேர்ப்பு’ என்ற பக்கத்தை க்ளிக் செய்து “ORA’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துவிட்டு,  தேவையான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும். பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்யுங்கள்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் ஏதேனும் ஒரு கிளையில் பணத்தை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு வங்கியின் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது விசா/மாஸ்டர்/ரூபே/கிரெடிட்/டெபிட் கார்டு/யுபிஐ கட்டணத்தைப் பயன்படுத்தியோ ₹25 கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *