Categories: latest news

கல்லீரல் கொழுப்பில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்?.. வாங்க பார்ப்போம்..

கல்லீரல் என்பது நமது உடலில் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவானது கல்லீரலுக்கு சென்று பின்பு அங்கு செரிமானமாக்கப்பட்டு பின்பு தேவையில்லாத நச்சு பொருட்களை நமது உடலில் இருந்து விடுவிக்கிறது. இவ்வாறான கல்லீரலை நாம் உண்ணும் உணவால்  கெடுக்கிறோம். நாம் உண்ணும் உணவில் அதிக கொழுப்பு இருந்தால் அது இதில் தங்கி பின் கொழுப்பானது கல்லீரலை சுற்றி ஒரு அடுக்காக உருவாகிறது். இதனால் நமது உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுவதோடு ஒரு கட்டத்தில் நமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. நாம் நமது உணவு பழக்கத்தில் சில மாறுதல்களை கொண்டு வருவதன் மூலம் கல்லீரல் கொழுப்பினை வர விடாமல் தடுக்கலாம்.

fatty liver

உணவில் 50% காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்:

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பாதியளவு காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் நாம் நமது கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ளலாம். இந்த காய்கறிகளை பொறுத்தோ அல்லது சூப் வடிவிலோ அல்லது குழம்பு வடிவிலோ நாம் அன்றாடம் உண்ணலாம்.

vegetables1

சற்று புளித்த உணவை சாப்பிடுதல்:

நமது உணவில் இயற்கையாக புளிக்க வைக்கப்படும் பொருட்களான கஞ்சி, ராகி கூழ், தயிர், மோர் போன்ற பொருட்களை சேர்ப்பதால் நாம் நமது கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளலாம்.

ragi koozh

சூடான நீர் மற்றும் எலுமிச்சை சாறு:

நாம் தினமும் சாப்பிட்டு முடித்தபின் வெதுவெதுப்பான நீரை அருந்தினால் கல்லீரலை பாதுகாக்கலாம். மேலும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் அதில் உள்ள அமிலம் நமது உணவை நன்கு செரிக்க வைக்கிறது. இதனால் நமது உணவு நன்கு செரிமானமாகி நமது உடலுக்கும் நன்மை பயக்கிறது.

warm water

நார்சத்துள்ள உணவுகள்:

நார்சத்துள்ள உணவு வகைகளை நாம் சாப்பிடுவதால் நமது உணவில் உள்ள கொழுப்பினை நன்கு செரிக்க வைத்து தேவையில்லாத கொழுப்பினை கரைய செய்கிறது.

fibre foods

பேக்டு ஃபுட்ஸ்:

பிஸ்கட், பிரட், கேக்ஸ் போன்றவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் கல்லீரலை சுற்றி கொழுப்பை தேங்க வைக்கின்றது. இந்த மாதிரி உணவுகளை தவிர்ப்பது நமது கல்லீரலுக்கு நல்லது.

baked foods1

பூண்டு:

பூண்டில் அல்லிசின் எனும் வேதிபொருள் உள்ளதால் அது நமது கல்லீரலில் ஏற்படும் தேவையில்லாத ஒவ்வாமையை தடுக்கிறது.

garlic

கீரை, நட்ஸ் உண்ணுதல்:

கரையக்கூடிய கொழுப்பு அமிலங்கள், மினரல்கள், விட்டமின் நிறைந்த உணவுகளை நமது அன்றாட வாழ்வில் சேர்ப்பதாலும் நாம் நமது கல்லீரலை நல்ல முறையில் வைத்துகொள்ளலாம்.

green veggies

amutha raja

Recent Posts

Gemini- Siri: கைகோர்க்கும் இரண்டு ஜாம்பவான்கள்.. கைகூடுமா திட்டம்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…

1 day ago

ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த Sean Williams.. என்ன நடந்தது?

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…

1 day ago

ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துருச்சு OpenAI Sora.. இந்தியாவுக்கு எப்போ வரும்?

OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…

1 day ago

iPhone 16 Plus: ஜியோ மார்ட்டின் அதிரடி விலைக்குறைப்பு… எவ்வளவு தெரியுமா?

ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…

1 day ago

Google chrome பயனாளர்களுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…

2 days ago

ISRO-வின் 4 டன் Bahubali ராக்கெட் – என்னவெல்லாம் ஸ்பெஷல்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…

3 days ago