இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுடனான தொடரில் வெற்றி பெற்று, புத்துணர்வுடன் இந்தியாவிற்கு வந்தது அந்த அணி. ஆனால் டெஸ்ட் தொடரில் இந்தியர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று தொடரை இழந்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளில் மட்டுமே சீறிப்பாய்ந்தது அந்த அணி. அதன் பின்னர் ஓரு நாள் கூட இந்திய அணிக்கு இணையான ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்தது அந்த அணி.
ஆஸ்திரேலியா,தென்-ஆப்பிரிக்கா,நியூசிலாந்து,இலங்கை அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்படுகிறது இந்த அணி. ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கதையே வேறுதான், இது சிறிது அபாயகரமான அணியாகவே பார்க்கப்படுகிறது.
இருபது ஓவர் போட்டிகளில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முக்கிய வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் பல நேரங்களில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதானல் டெஸ்ட் தொடரை விட இந்த இருபது ஓவர் போட்டி தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருந்து விடாது. ஆனால் இந்திய அணி இப்போது இருபது ஓவர் போட்டிகளின் உலக சாம்பியன் என்பதாலும், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதாலும் இம்முறை இது வங்கதேசத்திற்கு அதிகமான சவால்களை கொடுக்கும் என்பது ஒரு புறம் ஏற்புடைய ஒன்றாகவே இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி ஆறாம் தேதி குவாலியரில் வைத்து நடைபெற உள்ளது. முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் டில்லி, ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…