latest news
அரசு வழங்கும் 1000 ரூபாய் வேண்டுமா…? புதிய பயனாளர்கள் இணைப்பு… உடனே விண்ணப்பிங்க..!
தமிழகத்தில் இந்த மாதம் முதல் புதிதாக 1.48 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.
பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் சுயமரியாதையை காத்திடும் வகையில் தமிழக அரசால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை தற்போது விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு தமிழக அரசால் சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட் மின்சாரத்திற்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் விண்ணப்பிப்பவர்கள் கார், ஜீப் போன்ற எந்த ஒரு வாகனங்களையும் வைத்திருக்கக் கூடாது. அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலுக்குள் வருபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம் இந்த திட்டத்தில் இணைந்த பிறகு யாராவது கார் வாங்கினாலோ, அரசு வேலைக்கு சென்றாலோ, ஆண்டு வருமானம் அதிகரித்தாலோ அவர்கள் பயனாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களும் இந்த திட்டத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு பரிசீலித்து அவர்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்கப்பட்டு வருவார்கள். 21 வயது நிரம்பிய குடும்பத் தலைவிகள் இ சேவை மையம் மூலமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.