நடிகர் விஜயின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விதவிதமாக 15 வெரைட்டியான உணவுகள் ரெடியாகி வருகின்றது. அது என்னென்ன என்பதை தான் நாம் இதில் பார்க்கப் போகிறோம்.
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்பட்ட வருபவர் நடிகர் விஜய். இவரது திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்கும். சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த இவர் தற்போது அரசியலில் குதித்து இருக்கின்றார். பொதுவாக நடிகர், நடிகைகள் தங்கள் மார்க்கெட் இழந்த பிறகு தான் கட்சி தொடங்குவார்கள். ஆனால் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே கட்சியை தொடங்கி இருக்கின்றார் நடிகர் விஜய்.
தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்திருக்கும் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே கடந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடத்தி இருந்தார். தற்போது கட்சி தொடங்கிய பின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்கின்ற முறையில் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றார்.
முதற்கட்டமாக கடந்த 28ஆம் தேதி சென்னை திருவான்மையூரில் தனியார் மண்டபத்தில் 21 மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 700க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பங்கேற்று இருக்கிறார்கள்.
அவர்களுடன் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் என அனைவரும் பஸ்களில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் கட்சி நிர்வாகிகள், பவுன்சர்கள் என்று சுமார் 4000 பேருக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுக்கு மதிய உணவு சிறப்பாக தயாராகி வருகின்றது.
அதாவது 15 வெரைட்டியான உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்றைய மதிய விருந்து பட்டியலில் சாதம், வடை, அவியல், அப்பளம், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, ஆனியன் மணிலா, செட்டிநாடு வத்த குழம்பு, கதம்ப சாம்பார், சாண்ட்விச் ஸ்வீட், தக்காளி ரசம் போன்றவை இடம்பெற்று இருக்கின்றது. நடிகர் விஜய் தரப்பிலிருந்து மாணவ மாணவிகளுக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…