பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தொடர் மலையால் ஆறுகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இருக்கின்றது. கோசி, பாகமதி , கந்தகம்லா, அதர்வா உள்ளிட்டா முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. அதிகபட்சமாக மதுபானியில் ஆறு பேர், அவுரங்காபாத்தில் நான்கு பேர், பாட்னாவில் இரண்டு பேர் என உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பேரிடர் வேளாண் துறையின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பிஹாரில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மட்டும் இந்த மாதம் 70 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…