Connect with us

Cricket

அலப்பறை கிளப்பிய பிரித்வி ஷா.. கவுன்டி அணிக்காக 153 பந்துகளில் 244 ரன்கள் விளாசி அசத்தல்..!

Published

on

Prithvi-Shaw-Featured-Img

இந்திய கிரிக்கெட்டில் அபார வீரராக உருவெடுப்பார் என்று அனைவரையும் நினைக்க வைத்தவர் பிரித்வி ஷா. அண்டர் 19 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்த பிரித்வி ஷா 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து, தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இவரது ஆட்டம் காரணமாக, கிரிக்கெட்டில் இவர் பல்வேறு சாதனைகளை படைப்பார் என்று பலரும் கூறி வந்தனர்.

இந்திய அணிக்காக ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி இருந்த நிலையில், காயம் காரணமாகவும், ஃபார்மில் இல்லாமல் போனதும், இவர் இந்திய அணியில் நீடிக்க முடியாத காரணங்கள் ஆகிவிட்டன. இந்திய அணியில் இருந்து வெளியேறும் தருவாயில் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.

Prithvi-Shaw

Prithvi-Shaw

மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கும் முயற்சியாக பிரித்வி ஷா தற்போது கவுன்டி அணி நார்தாம்ப்டன்ஷயருக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில், சோமர்செட் அணிக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் பிரித்வி ஷா 129 பந்துகளில் 200 ரன்களை விளாசினார். மொத்தம் 153 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா 244 ரன்களை குவித்தார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் நார்தாம்ப்டன்ஷயர் அணி எட்டு விக்கெட்கள் இழப்புக்கு 415 ரன்களை குவித்தது.

கடின இலக்கை துரத்திய சொமர்செட் அணிக்கு ஆன்ட்ரூ உமீத் 67 பந்துகளில் 77 ரன்கள், லீவிஸ் கோல்ட்ஸ்வொர்தி 62 பந்துகளில் 47 ரன்கள், சீன் டிக்சன் 48 பந்துகளில் 52 ரன்கள் மற்றும் நெட் லொனார்ட் 19 பந்துகளில் 32 ரன்களை குவித்தனர். இதன் மூலம் அந்த அணி 328 ரன்களை குவித்தது. எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால், சொமர்செட் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நார்தம்படன்ஷயர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Prithvi-Shaw-1

Prithvi-Shaw-1

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரித்வி ஷா தனது கடினமான சூழல்களின் போது, யாருடன் அதிகம் பேசுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும் போது, “எல்லோரும் மற்றவர்களுடன் பேசுவர். ஆனால் வெளிப்படையாக பேசும் போது.. நான் இதுவரை யாருடனும் அப்படி பேசியது இல்லை. மகிழ்ச்சியான சம்பவங்கள் அனைத்தும் நடக்கும், ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் எப்போதும் தனிமையாகவே இருக்கும்,” என்று தெரிவித்தார்.

google news