Connect with us

latest news

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!!

Published

on

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அனியூர் சிவா, பாமக சார்பாக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்திருக்கிறார்கள். 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பழனி வாக்கு எண்ணும் மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பூட்டி சீல் வைத்தார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. காலை 6 மணிக்கு எல்லாம் வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தொடங்கும்.

காலை 7.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணும் பணி நடைபெறும். சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முதலில் தபால் வாக்குகள், அதை எடுத்து மின்னணு வகுப்பகுதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி தற்போது மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *