latest news
ரூ.56 லட்சம்… குப்பையை வைத்து லட்சத்தில் புரளும் நபர்… இது கூட நல்ல ஐடியாவா இருக்கே…!
குப்பைகளை சேகரித்து வைத்து ஒரு வாலிபர் 56 லட்சம் சம்பாதித்து இருக்கின்றார். மக்கள் வேண்டாம் என தூக்கி வீசப்பட்ட குப்பை குவியல்களில் இருந்து பொருட்களை சேகரித்து வைத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதனை 56 லட்சம் ரூபாய்க்கு விற்று பணமாக்கி இருக்கின்றார். ஆஸ்திரேலியா கிட்னியை சேர்ந்தவர் லியோனார்டோ.
30 வயதான இவர் சிட்னியின் தெருக்களில் மக்கள் வேண்டாம் என்று வீசப்பட்ட குப்பைகளை எடுத்து வைத்திருக்கின்றார். அங்கு உள்ளூர் நிர்வாகம் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை அகற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பர்னிச்சர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களை தங்களுக்கு வேண்டாம் என்று பொது வெளியில் வீசி வருகிறார்கள்.
அதுபோன்ற பொருட்களை குப்பையில் இருந்து சேகரித்த லியோனார்டா, அவற்றை பழுது பார்த்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்திருக்கின்றார். இதன் மூலமாக 56 லட்சம் வரை அவர் சம்பாதித்து இருந்ததாக கூறியுள்ளார். இதில் பெரிய மற்றும் கனமான பொருட்களை அவர் எடுக்க மாட்டாராம்.
சிறிய பொருட்கள் மற்றும் எளிதில் பழுது பார்க்கக்கூடிய பொருட்களை எடுத்து அவற்றை சரி செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றார். பெரிய பொருட்களை கையாளுவது, எடுத்துச் செல்வது கடினமாக இருக்கும் என்பதால் அதை எடுக்க மாட்டேன் என்கின்றார். இப்படி கிடைக்கும் பணத்தை தனது வீட்டு வாடகை செலுத்துவதற்கு அவர் பயன்படுத்தி வருகின்றார்.