கணவர் தாக்கியதால் மனைவி தனது பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வருவது என்பது சாதாரண விஷயம் தான். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளும் கணவனோ மனைவியோ ஒரு நொடியில் விபரீதமான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். அப்படி ஒரு பெண் எடுத்த முடிவால் நான்கு பேரின் உயிர் பிரிந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மண்டோசர் மாவட்டம் பின்பல்ஹடா என்ற பகுதியை சேர்ந்த ரொடு கிங் என்பவரின் மனைவி சுகுணா பாய். இந்த தம்பதிகளுக்கு அரவிந்த், அனுஷா, பிட்டு, கார்த்திக் என்று 4 குழந்தைகள் இருக்கிறார்கள் . கடந்த சில நாட்களாக ரொடு கிங்கிக்கும் அவரது மனைவி சுகுணா பாய்க்கும் சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டை வரும் போதெல்லாம் கணவர் சுகுணா பாய் அடித்து தாக்கியிருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ரொடு சிங் மனைவியை கடுமையாக தாக்கி இருக்கின்றார். இதனால் மணமடைந்த சுகுணா தனது 4 குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாலை வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கின்றார்.
பின்னர் ஊரின் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு தங்கிய அவர் அதிகாலை அருகில் உள்ள கிணற்றில் நான்கு பிள்ளைகளுடன் குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் குதித்த 5 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்து இருக்கின்றார். ஆனால் சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சுகுபாய் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…