இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.
முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.
நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…