நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள்.
எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் என்ற தேர்வு எழுதப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாகவே பேப்பர் லீக் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து பலரும் அதிக அளவு மதிப்பெண்களை பெற்றது தெரியவந்தது. அது மட்டும் இல்லாமல் கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. 1500 க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதனால் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றசாட்டி போராட்டங்களை நடத்தினர்.
பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இது தொடர்பாக மட்டும் மொத்தம் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது .அதாவது நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அந்த மனுவில் “நீதிமன்றம் நீட் யூஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயம் அற்றதாகவும், கடுமையானதாகவும் மட்டுமல்லாமல் விதிமீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14வது பிரிவு படி மீறப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டுள்ளது .
நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…