ஒரு முதியவர் பாம்பை கட்டுப்படுத்துகிறேன் என்று கூறி அதை கடுப்பேத்தி கடி வாங்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆச்சரியமான பல விஷயங்கள் நிரம்பி இருக்கின்றது. இணையதளங்களில் நாம் காணும் வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் சில சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் இருக்கும். தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பாம்பு தொடர்பான வீடியோக்கள் தான் வைரலாகி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞன் உயிரிழந்த பாம்புவுக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதனை காப்பாற்றி இருந்த இதனைப் பார்த்த பலரும் அவரின் மனிதாபிமானத்தை பாராட்டி வந்தார்கள்.
இங்கு ஒரு நபர் பாம்புடன் சில சேவைகளை செய்திருக்கின்றார். பாம்பை பார்த்தால் அனைவரும் பயப்படுவார்கள். மக்கள் அவற்றிலிருந்து விலகி இருக்கவே முயற்சி செய்வார்கள். ஆனால் சிலர் சமூக வலைதள பக்கங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சில தேவையற்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பு முன்பு அமர்ந்து கொண்டு அதனை கடுப்பேற்றி வருகின்றார். அதனிடம் ஏதோ பேசி வருகின்றார். மேலும் அவர் முன்பு இருப்பது ஒரு பெரிய கருநாகம். அந்த நபர் பாம்பின் கண்களை நேராக பார்த்து ஏதோ சொல்கின்றார். அந்த பாம்பை அவர் கட்டுப்படுத்த நினைப்பதாக எண்ணி சில விஷயங்களை செய்து வர அதில் கடுப்பான பாம்பு அவர் மூக்கிலேயே கடித்து விடுகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த நபரை திட்டி வருகிறார்கள். சும்மா இருந்த பாம்ப சீண்டுனா இப்படி தான் நடக்கும் என்று கூறி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…