உணவங்களில் உணவு சாப்பிட போன போதும், அல்லது பார்சல் வாங்கிய போதும் அந்த உணவில் புழு இருக்கிறது, கரப்பான் பூச்சி இருக்கிறது என புகைப்படம் எடுத்து அந்த உணவை ஆர்டர் செய்தவர் என்கிற செய்தியை நாம் பார்த்திருப்போம். கடந்த பல வருடங்களாகவே இது போன்ற செய்திகளை சமூகவலைத்தளங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
சில சமயம் ஹோட்டலில் சாப்பிடும்போது புழு அல்லது கரப்பான் பூச்சி கிடப்பதை பார்த்து வாடிக்கையாளர் ஹோட்டல் நிர்வாகத்திடம் சொன்னதாகவும், ஆனால், அதை அவர்கள் அலட்சியம் செய்ததாகவும், பொறுப்பான பதிலை சொல்லவில்லை எனவும் பலரும் சொல்வதுண்டு. இது போன்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகிறது.
இந்நிலையில்தான், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஒன்றில் மனித விரல் கிடந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாலாடு பகுதியில் வசித்து வருபவர் ஓர்லம் பிரிண்டன். இவர் ஒரு மருத்துவர். இவரின் சகோதரி ஆன்லைனில் YUMMO நிறுவனத்தின் பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார்.
அந்த ஐஸ்கிரீமை மருத்துவர் ஓர்லம் பிரிண்டர் பாதிக்கு மேல் சாப்பிட்ட நிலையில் வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்து அதில் பார்த்தபோது 2 செ.மீ நீளமுள்ள ஒரு மனித விரல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதை yummo நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்தார். ஆனால், அவருக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே, அந்த பகுதியில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…