Mumbai: தற்போதைய காலத்தில் பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் மளிகை பொருட்கள் முதல் உணவுகள் வரை ஆர்டர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த பொருட்கள் தரமானதாக இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவமும் நடக்க தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் தற்போது ஏகப்பட்ட மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் ஆன்லைன் ஆப்கள் அதிகரித்துவிட்டன. அதில் தேவைப்படும் எல்லாமுமே கிடைப்பதால் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் போட்டு வாங்கி கொள்கின்றனர். அப்படி தான் மும்பையை சேர்ந்த சேராரோ என்பவர் வீட்டிற்கு சில மளிகை பொருட்களை ஆர்டர் செய்து இருக்கிறார்.
அதில் மூன்று யம்மோ பிராண்டை சேர்ந்த பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்க்ரீமும் இருந்ததாம். பொருட்கள் டெலிவரி ஆனவுடன் அதில் இருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டவருக்கு வாயில் எதுவோ தட்டுப்பட நட்ஸ் அல்லது சாக்லேட் கூறுகள் இருக்கும் என கையில் துப்பி பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது மனித கைவிரலின் மேல் துண்டு. உடனே வீடியோவாக பதிவு செய்து அதை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த விஷயம் வைரலாகி வரும் நிலையில் அந்த கைவிரல் தடவியியல் துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இந்த பிரச்னை தற்போது பலரும் அடுத்து என்ன நடக்கும் என கவனிக்க வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குவைத் கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது எப்படி? 43 இந்தியர்களின் உயிரை காவு வாங்கிய அதிகாலை அகோரம்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…