latest news
அடுத்த ஒரு வாரம்… தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்…? வானிலை கொடுத்த ரிப்போர்ட்…!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் ஏனைய தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி இருக்கின்றது.
சென்னையில் நேற்று மாலை பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை 10 முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் பல பகுதிகளில் இரவு வேலைகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சம் வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.