வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜார்க்கண்டிலிருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருப்பதை பார்த்த பயணிகள் அச்சமடைந்து இருக்கிறார்கள். பின்னர் பாம்பு பத்திரமாக நீக்கப்பட்டு ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக ரயில்களில் பாம்புகள் நுழையும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு ஸ்லீப்பர் கோச்சில் கம்பியில் பாம்பு இருந்ததை பார்த்த பயணிகள் அனைவரும் பீதி அடைந்தார்கள். பின்னர் அந்த பாம்புவை அங்கிருந்த பயணிகளில் ஒருவர் பத்திரமாக பிடித்து வெளியில் தூக்கி போட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ரயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்திருக்கின்றார். புகாரின் பெயரில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்து இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கின்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த புகாருக்கு ரயில்வே துறை பதில் கொடுத்து இருந்தது. இதேபோல கடந்த மாதம் ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த கரிப் ரதம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு இருப்பதை பார்த்த பயணிகள் அச்சமடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…