latest news
பெண்களுக்கு அட்வைஸ் பண்ணியே… கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலம்… நல்ல பிசினஸா இருக்கே…!
பெண்களுக்கு ஆலோசனை கூறிய கோடிகளில் ஒருவர் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதள பக்கங்கள் தற்போது பொழுதுபோக்கு தளமாக மட்டுமில்லாமல் பணம் ஈட்டும் தளமாகவும் திகழ்ந்து வருகின்றது. சீனாவை சேர்ந்த ஒரு பெண் ஆலோசனைகளை கூறி தற்போது வரை 163 கோடி சம்பாதித்து இருக்கின்றாராம். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கியூ குவின் என்ற பெயர் கொண்ட இந்த பெண் காதல் உறவுகளை எப்படி கையாளுவது என்பது குறித்த பல சர்ச்சையான கருத்துக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார். அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்கள் இவரிடம் சமூக வலைதள பக்கங்களில் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.
அதற்கும் இவர் ஆலோசனை கொடுத்து வருகின்றார். இவர் பெண்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்கி வருகின்றார். அந்த வகையில் 12000, 43 ஆயிரம் என்ற கவுன்சிலிங் பேக்கேஜுகள் இருக்கின்றது. இந்த பேக்கேஜ்களின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றாராம். அந்த வகையில் ஆண்டுக்கு தோராயமாக 142 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது இந்திய மதிப்பில் 163 கோடி ஆகும்.