govt update news
உங்க ஆதாரில் எந்த மொபைல் நம்பர் இருக்குனு உங்களுக்கு தெரியலையா…? கண்டுபிடிக்க இதோ எளிய வழி…!
இந்தியாவை பொறுத்த வரையில் ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவரின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இன்றைய சூழலில் வங்கி கணக்கு தொடங்குவதில் தொடங்கி சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியம். ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பயனர்கள் எப்போதும் அப்டேட்-ஆக வைத்திருக்க வேண்டும்.
பெயர், பிறந்த தேதி, செல்போன் நம்பர் அனைத்தையும் சரியாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது. அதேசமயம் ஆதார் கார்டில் எந்த ஒரு அப்டேட்டை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு செல்போன் நம்பர் என்பது மிக அவசியம். நாம் ஆதார் எடுக்கும் போது பயன்படுத்திய மொபைல் நம்பரை அப்போது ஆதார் கார்டு எடுப்பதற்கு கொடுத்து இருப்போம்.
இந்த மொபைல் நம்பரை நாம் மாற்றி இருக்கலாம் அல்லது சில காரணங்களால் தொலைந்து போய் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் ஆதார் கார்டில் எந்த மொபைல் நம்பர் உள்ளது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதற்கு முதலில் https://uidai.gov.in என்ற பக்கத்திற்கு சென்று எனது ஆதார் பிரிவில் ஆதார் சேவைகளில் ஆதார் எண் சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் ஆதார் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும். பின்னர் சரிபார்க்க தொடரவும் என்பதை கிளிக் செய்தால், உங்களது மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த மொபைல் நம்பரின் கடைசி மூன்று இலக்கங்கள் அதில் தெரியும். ஒருவேளை அந்த மொபைல் எண் காலியாக இருந்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் எந்த தொலைபேசி எண்ணும் இணைக்கப்படவில்லை என்று அர்த்தம். இதையடுத்து நாம் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு நம்முடைய புது செல்போன் நம்பரை இணைத்துக் கொள்ள முடியும்.