உங்க ஆதாரில் எந்த மொபைல் நம்பர் இருக்குனு உங்களுக்கு தெரியலையா…? கண்டுபிடிக்க இதோ எளிய வழி…!

இந்தியாவை பொறுத்த வரையில் ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவரின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. இன்றைய சூழலில் வங்கி கணக்கு தொடங்குவதில் தொடங்கி சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியம். ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பயனர்கள் எப்போதும் அப்டேட்-ஆக வைத்திருக்க வேண்டும்.

பெயர், பிறந்த தேதி, செல்போன் நம்பர் அனைத்தையும் சரியாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது. அதேசமயம் ஆதார் கார்டில் எந்த ஒரு அப்டேட்டை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு செல்போன் நம்பர் என்பது மிக அவசியம். நாம் ஆதார் எடுக்கும் போது பயன்படுத்திய மொபைல் நம்பரை அப்போது ஆதார் கார்டு எடுப்பதற்கு கொடுத்து இருப்போம்.

இந்த மொபைல் நம்பரை நாம் மாற்றி இருக்கலாம் அல்லது சில காரணங்களால் தொலைந்து போய் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் ஆதார் கார்டில் எந்த மொபைல் நம்பர் உள்ளது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.  அதற்கு முதலில் https://uidai.gov.in என்ற பக்கத்திற்கு சென்று எனது ஆதார் பிரிவில் ஆதார் சேவைகளில் ஆதார் எண் சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும். பின்னர் சரிபார்க்க தொடரவும் என்பதை கிளிக் செய்தால், உங்களது மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த மொபைல் நம்பரின் கடைசி மூன்று இலக்கங்கள் அதில் தெரியும். ஒருவேளை அந்த மொபைல் எண் காலியாக இருந்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் எந்த தொலைபேசி எண்ணும் இணைக்கப்படவில்லை என்று அர்த்தம். இதையடுத்து நாம் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு நம்முடைய புது செல்போன் நம்பரை இணைத்துக் கொள்ள முடியும்.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

1 hour ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

2 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago