Connect with us

Finance

பான் – ஆதார் இணைத்துவிட்டீர்களா?.. இதோ மற்றுமொரு வாய்ப்பு..உடனே பயன்படுத்தி கொள்ளுங்க..

Published

on

aadhaar pan link

வருமானவரித்துறை தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தினை மறுபடியும் நீட்டித்துள்ளது. இதன்படி வருகின்ற ஜுன் 30 ஆம் தேதி வரை ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க கெடு வைத்துள்ளது.

சட்டத்தின் பிரிவு எண் 139AA கீழ் அனைத்து இந்திய குடிமகனும் ஜுலை 1, 2017 ஆம் நாளுக்கு பிறகு பான் கார்டு வைத்திருந்தால் அவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்துறை விதியின் படி, எந்த ஒரு தனி நபரும் தங்களது ஆதார் எண்ணை சட்டபடி இணைக்காவிட்டால் அவர்களின் பான் எண்ணானது முடக்கப்படும். மேலும் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் எந்த நபரும் தங்களின் வருமான வரி விவர அறிக்கையில் பான் எண்ணை குறிப்பிட முடியாது. மேலும் நாம் வங்கிகளில் எந்த ஒரு பணபரிமாற்றத்தையும் செய்ய இயலாது.

ஆதார் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிவது எப்படி:

aathaar pan link status

aathaar pan link status

ஆதார் எண் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிய கீழே உள்ள முறைப்படி நாம் தெரிந்து கொள்ளலாம்.

  1. முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.incometax.gov.in/iec/foportal என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
  2. பின்னர் அந்த பக்கத்தில் இடதுபுறம் உள்ள “Quick Link” என்ற பட்டனை அழுத்தவும்.
  3. லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்தவும்.
  4. அதனும் 10 இலக்க பான் எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  5. தேவையான தகவல்களை அளித்த பின் “View Link Aadhaar Status” என்ற பட்டனை அழுத்தவும்
  6. ஒருவேளை நமது ஆதார் எண் ஏற்கனவே இணைந்திருந்தால் நாம் நமது ஆதார் எண்ணை திரையில் காணலாம்.

ஆதார் பான் கார்டுடன் இணைந்திருப்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக எவ்வாறு அறிவது:

  1. 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு கீழ்காணும் முறைப்படி குறிஞ்செய்தியினை அனுப்பலாம். “UIDPAN<12 Digit Aadhaar number><10 digit PAN number>.
  2. நமது ஆதார் எண் பான் கார்டுடன் இணைந்திருப்பதை எஸ்.எம்.எஸ் வழியாக உறுதி செய்து கொள்ளலாம்.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது எவ்வாறு?:

  1. முதலில் http://www.incometaxindiaefilling.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  2. ”Quick Link” என்ற பட்டன் கீழ் உள்ள “லிங்க் ஆதார்” என்ற பட்டனை சொடுக்கவும்.
  3. பான் மற்றும் ஆதார் எண்ணை கொடுக்கவும்.
  4. தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின் “Link Now” என்ற பட்டனை அழுத்தவும்.
  5. பின்னர் ஆதார் எண் இணைந்ததற்கான பாப் அப் மெசேஜை காணலாம்.
google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *