Connect with us

latest news

ஆடி மாதம் முதியோருக்கு இலவச பயணம்… அறநிலையத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு…

Published

on

ஆடி மாதம் அம்மன் கோவில் ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அறநிலைய துறை அறிவித்துள்ளது.

ஆடி மாதம் பொதுவாக அம்மன் கோயில்களில் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். அது மிகவும் பிரபலமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அப்படி ஆடி மாதத்தில் வயது மூப்பு காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாக சாமி தரிசனம் செய்ய முடியாத முதியோர்களுக்கு இலவச பயணம் தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது” 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பில் ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதம் வைணவ கோயில்களுக்கும் வயது அதிகம் காரணமாகவும் பொருளாதார வசதியின்மை காரணமாகவும் சாமி தரிசனம் செய்ய இயலாத 60 முதல் 70 வயது இருக்கும் தலா 1000 பக்தர்கள் இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமை இடமாகக் கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1000 முதியோர்களை கட்டணமில்லாமல் ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்ல இருக்கிறார்கள்.

இதில் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று தஞ்சாவூர் மண்டலத்திற்கும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கும், திருச்சி மண்டலத்திற்கும், மதுரை மண்டலத்திற்கும், திருநெல்வேலி மண்டலத்திற்கும் தனித்தனியாக ஒரு பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மீகப் பயணம் நான்கு கட்டங்களாக ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 2,  ஆகஸ்ட் 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட இருக்கின்றது.

இந்த பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் 60 முதல் 70 வயது முற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலைத்துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேராக சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 17.7.2024க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *