நடிகர்கள் திடீரென இறந்துபோவது திரையுலகிற்கு மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் அதிர்ச்சிதான். அதுவும் கடந்த சில வருடங்களில் பல முக்கிய பிரபலங்கள் இறந்து போனார்கள். நடிகர் விவேக், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா, நடிகர் மாரிமுத்து, அல்வா வாசு, போண்டா மணி, நடிகர் சேசு, டேனியல் பாலாஜி என பலரும் மரணமடைந்தனர்.
இவர்கள் எல்லாருமே திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தவர்கள் என்பதுதான் சோகம். பெரும்பாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள். அல்லது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவார்கள். சிலர் என்ன காரணத்தால் இறந்தார்கள் என்பது வெளியே தெரியாமலேயே போய்விடும்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்தான், தமிழ் சினிமாவில் தெகிடி, மீசையை முறுக்கு, இரும்புத்திரை, லிப்ட், டெடி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்த நடிகர் பிரதீப் திடீரென மரணமடைந்திருக்கிறார்.
சென்னை கோட்டூர்பூரத்தில் தங்கி இருந்தவர் இவர். இவரின் வீடு 2 நாட்களாக திறக்கப்படாமலேயே இருந்தது. எனவே, சந்தேகப்பட்ட அவரின் நண்பர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் சடலமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…