தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் துணை முதல் – அமைச்சராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது என பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது. அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மகளிரணியின் தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மானமிகு, மாண்புமிகு அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
சமூகநீதி காப்பதில் சமரசமில்லா போராளியாக திகழும் உதயநிதிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில், பெரியாரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன் என்றும் தனது வீடியோ மூலமான வாழ்த்துச் செய்தியில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் சந்தானம் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் அது பத்து நாட்களுக்குள் நடந்தே தீரும் என உறுதிபட சொல்லியிருந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…