Connect with us

Finance

மத்திய பட்ஜெட்…ஆந்திராவுக்கு நிதியை அள்ளிக்கொடுத்துள்ள அரசு…

Published

on

Nirmala Seetharaman

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற்றது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் அனைத்து பாரதிய ஜனதா கட்சிக்கே சாதகமாக இருந்து வந்தது.

இத்தைகைய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி விடும் விதமாகத் தான் முடிவுகள் அமைந்தது. கூட்டணி ஆட்சி அமைய ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் துணையும், பிஹாரின் நிதிஷ் குமாரின் தயவும் தேவைப்பட்டது பாஜகவிற்கு.

இந்த இரண்டு தலைவர்களுமே தங்களது கூட்டணி உடன்படிக்கையின் படி பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமராக்க உதவினர். ஆட்சிக்கு தங்களது ஆதரவினை தரும் முன்னர் பல கோரிக்கைகளை இந்த இருவரும் முன்வைத்ததாக தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் அப்படியெல்லாம் ஏதும் கிடையாது என கூட்டணிக்கு உள்ளிருந்து பதில்களும் வந்தடைந்தது. இன்று தனது எழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதராமன்.

Union Budget

Union Budget

இந்த அறிவிப்பில் ஆந்திர மாநிலத்திர்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஆந்திராவின் தலைநகரான அமராவதியை கட்டமைக்க பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை முடிப்பதில் அரசு உறுதியேற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், தண்ணீர், எரிசக்தி, ரயில்வே மற்றும் சாலை ஆகிய உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசின் பட்ஜெட் உறுதியளித்துள்ளது.

விசாகப்பட்டிணம் – சென்னை தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன செலவினங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயலசீமா, பிரகாசம், வடக்கு கடலோர ஆந்திரா ஆகிய பின் தங்கிய பகுதிகளுக்கு மானியங்கள் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் வாயிலாக.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *