ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சிறிய அணியை எளிதில் வென்று விடலாம் என்று எண்ணிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். ஒருநாள் போட்டியில் மிகக் குறைந்த ரன்களில் தென் ஆப்பிரிக்கா அவுட் ஆகிவிடுமோ என்ற ஆவல் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், களத்துக்கு வந்த தென் ஆப்பிரிக்க வீரர் முல்டர் நிதானமாக ஆடி, தனது அணி ஓரளவுக்கு ரன் சேர்க்க காரணமாக செயல்பட்டார்.
இவரும் 52 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்தவர்களும் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். இதனால் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலகின் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் தென்ஆப்பிரிக்கா இத்தனை குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அபாரமாக செயல்பட்ட ஃபசல்ஹாக் ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளையும், காஸன்ஃபர் மூன்று விக்கெட்டுகளையும் சாய்த்தனர். ரஷித் கான் தன் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 26 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்களை எடுத்து, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இதுவே முதல்முறை ஆகும். சேசிங்கில் ஆப்கானிஸ்தானுக்கு ஓமர்சாய் மற்றும் குலாப்தீன் நையிப் முறையே 25 மற்றும் 34 ரன்களை அடித்து, தங்களின் அணிக்கு வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…