பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையான 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணமான பெண்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் பல மக்களுக்கு அதுவும் வீடு இல்லாதவர்களுக்கு பண உதவி செய்யப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த திட்டத்தால் பல மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இந்த திட்டத்தை பலரும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் முதல் தவணை பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ்கட் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2,350 பயனாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 11 பெண்கள் முதல் தவணையாக 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களின் காதலர்களுடன் தப்பி ஓடி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இரண்டாம் தவணை பணம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…