Finance
சனிக்கிழமை அதுவமா தங்கம் விலை செய்துள்ள கொடுமை!…மீண்டும் உயர்வு…
இந்திய வணிகத்தில் தங்கம் முக்கிய இடத்தினை எப்போதும பிடித்திருக்கும். இங்கு சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் என்பதால் தங்கத்தின் மீது கவனம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த வாரத்துவக்கதிலிருந்தே தங்கத்தின் விலை உயர்வையே சந்தித்து வந்தது. இடையில் வீழ்ச்சியும் அடைந்திருந்தது. ஆனால் நேற்று விலை உயர்வு மீண்டும் தலை தூக்கியது. இது தொடர் கதையாகி விடுமோ? என்ற அச்சம் எழத்துவங்கிய நேரத்தில் இன்று மீண்டும் உயர்வினை சந்தித்து நகைப் பிரியர்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ஏழாயிரத்து இருனூற்றி தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7,295/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று அறுபத்தி ஐந்து ரூபாய் (ரூ.65/-) உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை.
இந்த விலை ஏற்றத்தினால் ஒரு கிராம் தங்கம் இன்ரு ஏழாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ.7,360/-) விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராமின் விலை அறுபத்தி ஐந்து ரூபாய் (ரூ.65/-) அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ஐனூற்றி இருபது ரூபாய் (ரூ.520/-) உயர்ந்திருக்கிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து என்னூற்றி என்பது ரூபாயாக (ரூ.58,880/-) உள்ளது நேற்று ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ.58,360/-) விற்கப்பட்டு வந்த நிலையில். வெள்ளி நேற்று விற்கப்பட்ட அதே விலையில் தான் இன்றும் விற்கப்பட்டு வருகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.107/-) விற்பனை செய்யப்பட்டது போலவே இன்றும் அதே விலையில் தொடர்ந்து வருகிறது. நேற்றைப் போலவே ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்றும் ஒரு லடசத்து ஏழாயிரம் ரூபாயாக (ரூ.1,07,000/-) இருந்து வருகிறது.