தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று இத்தாலி G7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
இத்தாலியில் நடைபெற்ற G7 உலக நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
மாநாட்டில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து பிரதமர் மோடி பேசுகையில்,`மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி வெற்றிகரமானதாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியின் அனைத்து கூறுகளும் அனைவரையும் சென்றடைந்து, அதன்மூலம் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; மாறாக அழிவுக்குப் பயன்படக் கூடாது. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்’ என்று குறிப்பிட்டார். மேலும், `அனைவருக்கும் AI’ என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து உழைத்து வரும் இந்தியா, இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் பிரதமர் மோடி பேசினார்.
இதேபோல், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் மூலம் இந்திய மக்கள் தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க: சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…