Connect with us

latest news

90 மி.லி, பிளாஸ்டிக்கா இல்ல கண்ணாடி பாட்டிலா…? தமிழக அரசு பரிசீலினை… அவங்களே விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…

Published

on

90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாப்பிட்டு சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத ஏழை மக்கள் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயங்களை குடித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசு குறைந்த விலையில் டெட்ரா பேக் என்ற மது விற்பனையை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள். ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயர் சாவு அரங்கேறியதை தொடர்ந்து 100 மில்லி லிட்டர் ரூபாய் 15 என்கின்ற மலிவு விலையில் மது விற்பனையை தொடங்கியது தமிழக அரசு. அதன் பின்னர் அந்த திட்டம் நாளடைவில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.

தமிழகத்தில் பூரண மது விலக்கு  கொண்டு வர வேண்டும் என்பது பலரது விருப்பம். ஆனால் தற்போது அது இல்லை என்பதை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறிவிட்டார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறிய போது நமது பக்கத்து மாநிலங்களில் அதாவது கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது பானங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் 90 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க உள்ள நிலையில், அதனை கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யலாமா என்று பரிசீலித்து வருகின்றது. கடைசியில் பிளாஸ்டிக் பாட்டில் தான் சிறந்த முறை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

google news