இந்த வருடத்தின் ஒலிம்பிக்ஸை பாரீஸ் நடத்த இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒலிம்பிக்ஸ் காலதாமதமாக டோக்கியோவில் நடந்தது. தற்போதைய ஒலிம்பிக்ஸ் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்க இருக்கிறது. சில போட்டிகள் தொடக்க நிகழ்வுக்கு முன்னரே தொடங்கப்பட இருக்கிறது.
கால் பந்து போட்டிகள் இன்றும், கைப்பந்து போட்டிகள் நாளையும் தொடங்கும். ஆரம்ப நிகழ்வுகள் 26ந் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி 7.30க்கு நடக்க இருக்கிறது. 206 நாடுகளில் இருந்து 10,500 வீரர்கள் இந்த ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
325 தங்க பதக்கத்துக்காக 32 போட்டிகள் நடக்க இருக்கிறது. ஒலிம்பிக்ஸின் அதிகாரப்பூர்வ போட்டிகள் குறித்த தகவல்களை https://olympics.com/en/paris-2024/schedule/grid என்ற இணையத்தளத்தில் காணலாம். மொத்தமாக ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் 35 அரங்கில் நடக்க இருக்கிறது. நாடு முழுவதிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
பல வருடமாக இந்தியா ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டாலும் சொல்லும்படியான வெற்றி இல்லை. ஆனால் கடந்த சில ஒலிம்பிக்ஸில் சுவாரஸ்யமான வெற்றியை பெற்றுள்ளது. 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆறு பதக்கத்துடன் 55வது இடத்தில், 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கத்துடன் 67வது இடத்தில், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 7 பதக்கத்துடன் 48வது இடத்தில் இருந்தது. இந்தியா இதுவரை முதல் 10 இடங்களுக்குள் வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…