நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிய காலங்கள் போய் இன்று வீட்டிலிருந்தபடியே மொபைல் போனில் தங்களுக்கு பிடித்தமான பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அப்படி ஆர்டர் செய்யும் பொருட்கள் சில சமயம் வேறு பொருள்கள் வருவது வழக்கமாகவும் உள்ளது.
அமேசான் ஆர்டர்களில் மொபைலில் இருக்கு பதில் செங்கல், சோப்புக்கட்டி என பலவற்றை மாற்றி வைத்த சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் முதன்முறையாக பெங்களூரில் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அமேசான் நிறுவனம்.
இவர்கள் அமேசானில் இருந்து எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலரை ஆர்டர் செய்திருக்கின்றனர். இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு பார்சல் வந்திருக்கிறது. பெரிய தொகை கொடுத்து வாங்கிய பொருள் என்பதால் அதை திறக்கும் போது வீடியோவாக எடுத்து பெட்டியை திறந்து இருக்கின்றனர். ஆனால் உள்ளுக்குள் உயிருடன் ஒரு நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். நல்ல நேரமாக பாம்பு டேப்பில் சிக்கியதால் அவர்களால் சுதாரித்து கொள்ள முடிந்தது.
இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…
இதை தம்பதி வீடியோவாக அமேசான் நிறுவனத்திடம் புகார் அளித்த போது உங்கள் சிரமத்திற்கு மன்னித்து கொள்ளுங்கள். உங்களது தொகையை முழுவதுமாக ரிட்டன் செய்து விடுகிறோம் என கூலாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்துவிட்டாலும் வாடிக்கையாளர்கள் உயிருக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அமேசான் என்ன பதில் சொல்லி இருக்க முடியும்.
அமேசானின் இந்த பதிலால் கடுப்பான தம்பதிகள் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கின்றனர். அதில் பாதி திறந்த பெட்டியில் டேப்பில் பாம்பு ஒன்று ஒட்டிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்வது படமாகி இருக்கிறது. சுகாதாரம் அற்ற முறையில் அமேசான் வேர்ஹவுஸ்கள் இருப்பதே இந்த பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அமேசானில் டெலிவரி செய்யப்படும் பொருட்கள் பலகட்ட சோதனைக்கு பின்னரே வெளிவரும் என நினைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. பொருட்கள் மாற்றி அனுப்பப்படும் போது அதை நகைச்சுவையாக கடந்து சென்ற சிலர் இந்த விஷயத்தை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கின்றனர்.
அந்த வீடியோவைக் காண : https://x.com/IndiaToday/status/1803114710599958934
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…