1 மணி நேரத்தில் 13.5 கிலோ உணவை சாப்பிட்டால் லாபத்தில் 10%… உரிமையாளரின் திடீர் அறிவிப்பு… ரெடியா?

0
97

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் சேலஞ்சில் கலந்து கொள்வார். அந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றவர்களை ஏமாற்றி சம்பாதித்து வர இவர் அசராமல் 50 பரோட்டாவை சாப்பிடுவார்.

ஆனால் ஹோட்டல் ஓனர் கம்மி என சொல்ல சூரி இல்ல இல்ல மறுபடியும் கோட்டை அழி மீண்டும் சாப்பிடலாம் என அலறவிடுவார். குறிப்பிட்ட அந்த சீன் சூரிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்தது போல பலருக்கும் இப்படியும் ஒரு போட்டி இருக்கிறதா என்ற ஆச்சரியத்தையும் உருவாக்கியது.

தொடர்ந்து பல உணவகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டால் அந்த உணவு இலவசம் என்றும் பெரிய அளவிலான பரிசுத்தொகை என்றும் அடிக்கடி போட்டிகள் நடத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் உணவகம் ஒன்று இதையெல்லாம் விட ஒரு படி மேலாக சென்று ஒரு விஷயத்தை செய்திருக்கிறது.

அமெரிக்காவின் பிரபல உணவகம் 13.5 கிலோ எடையுள்ள அவர்களின் உணவை ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் உணவகத்தில் கிடைக்கும் லாபத்தில் 10% தரப்படும் என தடாலடியாக ஒரு சவாலை அறிவித்தது. சாப்பாடு, இறைச்சி, சீஸ் ஆகியவர்கள் அடங்கிய அந்த உணவை இதுவரை யாரும் முழுதாக சாப்பிட்டதே இல்லையாம்.

இதனால் இந்த சவாலை உணவகத்தின் நிறுவனர் விக் ரூவே அறிவித்தபோது, பலர் முயற்சி செய்து தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. போட்டியில் தோற்றுவிட்டால் சாப்பாட்டிற்கான பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் விதி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த உணவகத்திற்கு தற்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here