நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபிறகும் ஏன் இந்த அகங்காரம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாஜக தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, `ஜனநாயகத்தில் ஜெயித்த பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் அகங்காரம் காட்டுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், முதல்முறையாக தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அகங்காரம் காட்டுவதை இப்போதுதான் பார்க்கிறோம்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றது யார்? அரசமைத்தது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி காட்டும் அகங்காரம் என்பது, தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு சீட்கள் ஜெயித்தவர்கள் கூட காட்டியதில்லை’’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், `இந்த மேடையில் இருந்துகொண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு நேரடியாக ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, பாஜக மட்டுமே 240 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இது, இந்தியா கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்ற இடங்களை விட அதிகம்.
அப்புறம் ஏன் இந்த அகங்காரம். அதேபோல், காங்கிரஸ் கட்சி, 2014, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் வெற்றிபெற்ற இடங்களை விட இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறோம். அந்தத் தோல்வியை இன்னும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…