கே.பாலச்சந்தர் இயக்குனர் சிகரம் என கோலிவுட்டில் மட்டுமல்ல இந்திய திரைத்துறை ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தவர்.கமல், ரஜினியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை.
பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து வந்தவர் அனந்து. இவருக்கும் நடிகர் கமலுக்கு நல்ல நட்பு இருந்ததாக சொல்லப்பட்டது.
இதனை பயன்படுத்திக் கொண்டு கமலுக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார் அவர். ஹாலிவுட்டில் வெளியான “தி காட்ஃபாதர்” படத்தை தமிழில் எடுக்க கமல் நினைத்திருந்திருக்கிறார். அப்பா கேரக்டருக்கு சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்திருக்கிறார்.
இதைத் தெரிந்து கொண்ட அனந்து இந்த படத்தில் சிவாஜி கேரக்டருக்குத் தான் அதிக ஸ்கோப் இருக்கிறது, கமலுக்கு கம்மி தான் என கமல்ஹாசனிடம் சொல்லியிருக்கிறார்.
இதனால் அந்த படத்தின் கதையை வைத்து தமிழில் படம் எடுக்க நினைத்திருந்த கமல் தனது முடிவினை மாற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது அந்நாளில்.
ஆனால் வசூலில் மட்டுமல்லாது, தமிழ் சினிமா வரலாற்றில் அதிக சாதனைகளை செய்த படங்களில் ஒன்றான “தேவர் மகன்” படத்தில் சிவாஜியை நடிக்க வைத்தார்.
படத்தில் இருவரும் போட்டிப்போட்டு நடித்திருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சிவாஜியின் மீது தான் கொண்டிருந்த அன்பினையும் தெரியப்படுத்தும் விதமாகத் தான் “தேவர் மகன்” படத்தில் சிவாஜியை நடிக்க அனுகியதாக கமல்ஹாசனே பல முறை சொல்லியிருக்கிறார்.
படத்தில் சிவாஜி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் அதிக கைத்தட்டல்களை பெற்றிருந்ததாக சொல்லப்பட்டது படம் வெளியான நேரத்தில்.இவர்கள் இருவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தனது பங்கிற்கு சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் படத்தின் வில்லை நாசர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…