அம்பானி வீட்டில் திருமணம் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் மிகப் பெரிய அளவில் உயர்ந்து இருக்கின்றது.
இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவரின் இளைய மகனான ஆனந்த அம்பானிக்கும் அவரின் காதலியான வைர வியாபாரி மகள் ராதிகா மெர்சண்டுக்கும் வருகிற ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள jio old convention சென்டரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.
இந்த வளாகத்தில் மூன்று நாட்கள் திருமணம் நடைபெற உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே திருமண நிகழ்ச்சிகள் சம்பிரதாயங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையில் நடைபெற்று வருவதால் இதன் தாக்கம் அப்பகுதியில் அதிகரித்து இருக்கின்றது.
அதாவது மும்பையின் முக்கிய ரிலையன்ஸ் எஸ்டேட் மயமான பந்த்ரா பொருளாதாரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் மும்பை ஹோட்டல்கள் தங்களது கட்டணங்களை அதிக அளவில் உயர்த்தி இருக்கிறார்கள். ஜூலை 14 அன்று ஒரு ஓட்டல் ஒரு இரவுக்கு ₹91,350 க்கு வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது .
வழக்கமாக 13000 ரூபாய்க்கு இருந்த கட்டணமானது ஆனந்த அம்பானியின் திருமணத்திற்காக அதிக அளவு உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத காரணத்தினால், ஹோட்டல்கள் கட்டணம் உயர்ந்து இருக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் முன்பதிவு செய்து வருகிறார்கள். ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை அறைகள் எதுவும் அந்த ஹோட்டல்களில் இல்லை அனைத்தும் முன்பதிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…