latest news
இந்து சமயத்தை அழிக்க நாடகம் நடத்தும் திமுக…அண்ணாமலையின் அட்டாக் அறிக்கை…
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை உருவாக்கியது தமிழக அரசு.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, பரிந்துரை குறித்து பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்வியின் பொற்காலமாக பார்க்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்து இதுவரை ஆசிரிய பெருமக்கள் மீது ஏற்படாத சந்தேகம் இப்போது ஏன் வருகிறது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெயரின் முதல் எழுத்து வரிசையில் மாணவர்களை அமர வைப்பது. சமூக நீதி மாணவர் குழு அமைப்பது போன்ற பரிந்துரைகள் எல்லாம் நகைச்சுவை பரிந்துரைகள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வகுப்பு ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் எல்லாம் ஆளுங்கட்சியின் குழு தலையிடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போல் மாணவர்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், கையில் புனித கயிறுகளைக் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து சமய மாணவர்களுக்கு மட்டுமே பொருந்து பரிந்துரையை இந்து சமய அடையாளத்தை அழிக்க நினைக்கும் பரிந்துரையாகத்தான் பார்க்க முடியுமே தவிர, வேறு எந்த காரணங்கள் சொல்ல்பட்டாலும் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடகமே என அண்ணாமலை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரையை தனது அறிக்கையின் மூலம் விமர்சித்துள்ளார்.
நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி பாஜகவிற்கு இதை பற்றி எல்லாம் என்ன தெரியும் என சமீபத்தில் விழா ஒன்றில் பேசியிருந்தார் சந்துரு.