நீட் வினாத்தாள் லீக் ஆனது என்னமோ உண்மைதான் ஆனால் அது நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்று அண்ணாமலை பேசி இருக்கின்றார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போனஸ் மதிப்பெண் என்று பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குஜராத், ஜார்கண்ட், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்து இருக்கிறார்கள்,
நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த எட்டாம் தேதி நடந்த விசாரணையில் நீட் தேர்வின் புனித தன்மை மீறப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கு பதில் அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது “நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. அதில் நீட் வினாத்தாள் கசிவடைந்தது உண்மைதான். ஆனால் அந்த வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கும் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று தான் தெரிவித்திருக்கின்றது. எனவே வினாத்தாள் கசிவு மிகச் சிறிய அளவில்தான் நடந்துள்ளது” என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…