தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார்.
பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த வழக்கில் எட்டு பேர் நாங்கள் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்து இருக்கின்றார்கள்.
சரணடைந்த 8 பேரையும் கைது செய்த காவல்துறையினர் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், தென்னை, பனை மரங்களில் இருந்து கல் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்ததாவது “சுவையான மாம்பழங்கள் இருக்கும் மரத்தில் கல்லடி என்பது படத்தான் செய்யும் தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
நேற்று தேசிய கட்சியின் மாநில தலைவரை அவரது வீட்டின் வாசலில் வைத்து கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடிக் கொண்டிருக்கின்றது. கள்ளச்சாராயம் சாப்பிட்டு பலர் மரணம் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் சாதாரண மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் என்பது இல்லாத சூழ்நிலைதான் தற்போது உருவாகி இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…