பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல் துறை. சென்னையின் முக்கியமான இடத்தில் வைத்து நடந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சிலர் சரணடைந்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், இந்த வழக்கில் தொடர்புடையே மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அவர்களை கைது செய்தும் உள்ளனர். விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமூகர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள் போலீஸார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள ஐம்பது லட்ச ரூபாய் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக செய்தி வெளிவந்தது. இந்த பரிமாற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்தி விசாராணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள் காவல் துறையினர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் தமிழக காவல் துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது சதுரங்க விளையாட்டை செக் வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நியூஸ் தொலைக்காட்சியில் இது பற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. கொலை வழக்கில் தொடர்புடையதாக சிறைவாசத்தில் இருக்கும் இருபது பேரின் சொத்துக்களை முடக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வங்கியில் நடந்த பரிவர்த்தனைகள் அதன் பின்னர் வாங்கப்பட்ட சொத்துக்கள் இவற்றை பற்றிய விவரங்களை ஆராயவும் காவல் துறையினரால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தெரிவிக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…