ஆறுதல் தந்து வரும் அஸ்வின்…பட்டையை கிளப்பிய பங்களாதேஷ்!…

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் நாங்கள் இன்னும் கத்துக்குட்டிகள் அல்ல, வேகமான வளர்ச்சியை காட்டி வரும் அணி என்பதை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வென்று நிரூபித்துக் காட்டியது பங்களாதேஷ். அதே உத்வேகத்தோடு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது இந்த அணி.

டெஸ்ட் தர வரிசையில் ஆஸ்திரேலிய விரட்டி விட்டு முதல் இடத்திற்கு முன்னேற காத்திருக்கும் பலமிக்க இந்திய அணியை தனது முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர் கொண்டு விளையாடி வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி.

போட்டியின் முதல் நாளான இன்று தனது பேட்டிங்கை ஆடி வரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி துவக்கத்திலேயே காத்திருந்தது . பத்தொன்பது பந்துகளை மட்டுமே சந்தித்து ஆறு ரன்களை குவித்த நிலையில் தனது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும், ஆறு ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் நட்சத்திர வீரர் விராத் கோலியும் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பெவிலியன் திரும்பினர்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஷ்வால் பொறுமையாக ஆடி அரை சதத்தை கடந்தார்.

Kohli

ஒன்பது பவுண்டரிகளோடு நூற்றி பதினெட்டு பந்துகளை சந்தித்து ஐம்பத்தி ஆறு ரன்களை எடுத்த நிலையில் ஜெய்ஷ்வாலும் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்த வந்த விக்கெட் கீப்பர் பன்ட், ராகுல் ஆகியோரும் முப்பத்தி ஒன்பது, பதினாறு ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பற்றி நன்கு அறிந்த தமிழக வீரர் அஸ்வினோடு ஜோடி போட்டு விளையாடி வருகிறார் மற்றொரு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா.

முப்பத்தி ஒன்பது பந்துகளை சந்தித்து நாற்பது ரன்களுடன் களத்தில் நிற்கிறார் அஸ்வின். மறுமுனையில் அஸ்வினுக்கு உறுதுனையாக ஜடேஜா இருபது ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். ஐம்பத்தி மூன்று ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் ஆறு விக்கெட்டுகளை இழந்து இருனூற்றி எட்டு ரன்கள் எடுத்து தள்ளாடி வருகிறது இந்திய அணி.

sankar sundar

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

38 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

1 hour ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago