இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் ஐபிஎல்லை போல தமிழகத்தில் டிஎன்பிஎல் சமீப வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் இந்த வருட சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில்தான் தற்போது ஒரு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பொதுவாகவே அஸ்வின் கூல் கேரக்டராகவே இதுவரை ரசிகர்களிடம் காணப்பட்டு இருக்கிறார். ஐபிஎல்லில் அவரின் வீடியோக்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறும்.
இந்திய அணியில் கூட தன்னுடைய தமிழக வீரர்களுடன் தமிழில் உரையாடுவதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிராகன் எதிர்கொண்டது. இதில் முதலில் விளையாடிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது. இந்த நேரத்தில் 16வது ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி வீரர்கள் ரன் எடுப்பதில் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் டக்வுட்டில் அமர்ந்திருந்த அஸ்வின் கோவத்தில் எழுந்து சாகடித்துவிடுவேன் ஒழுங்கா விளையாடு என கத்தி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இன்னொரு கோலியை எங்களால் பார்க்க முடியாது என ஒரு சிலரும், எல்லோரும் துணி போல் அமைதியாக இருக்க முடியாது கேப்டனுக்கு கண்டிப்பாக கோபம் வரும் என ஒரு சிலரும் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 19.5 ஓவர் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் வீடியோ: https://x.com/rising_raj_/status/1818947461236293938
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…