Connect with us

latest news

தள்ளு முள்ளு…தலை முடியை இழுத்து தாக்குதல்…அலற வைத்த அருப்புக்கோட்டை சம்பவம்…

Published

on

Police

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள்டவுன்பட்டியை சார்ந்தவர் காளிகுமார். சரக்கு வாகண ஓட்டுனரான இவர் தனது வாகணத்தில் வழக்கம் போல சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளார். திருச்சுழி – ராமநாதபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த காளிக்குமாரின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் மறித்து, காளிக்குமாரை தாக்கி அரிவாளால் சராமாரியாக வெட்டியிருக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த காளிக்குமார் சிகீட்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கொடூர தாக்குதலுக்கு உள்ளான காளிக்குமார் உயிரிழந்தார்.

இந்நிலையில் கொலையில் தொடர்புடைய நபர்களை விரைவாக கைது செய்யக் கோரி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கினர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. போரட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண் டிஎஸ்பி காயத்ரியை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

Lady DSP

Lady DSP

பெண் டிஎஸ்பி காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடை பெற்றிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் இப்போது வைரலாக பரவி வருகிறது.

பெண் போலீஸ் அதிகாரியான காயத்ரி மீது மட்டுமல்லால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆண் காவலரும் தாக்கப்பட்டுள்ளார். பணியிலிருந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, தலை முடியை பிடித்து தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காளிக்குமார் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சிலரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறிய போதும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் காளிக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற போது தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

google news